சுதந்திரக் கிண்ணத்திற்குரிய அனைத்து நுழைவுச்சீட்டுக்களும் விற்பனை- ஸ்ரீலங்கா கிரிக்கற்!

Tuesday, March 6th, 2018

இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திர கிண்ணக் கிரிக்கட் போட்டிக்கான சகல நுழைவுச்சீட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கற் தெரிவித்துள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு சுதந்திர கிண்ண ரி 20 கிரிக்கட்போட்டித்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை இந்திய அணிகள் இன்று மோதுகின்றன.

மைதான நுழைவாயிலில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில் நுழைவுச்சீட்டுக்களை பெற்றுள்ள ரசிகர்களிடம் போட்டி ஆரம்பமாவதற்கு முன்கூட்டியே விளையாட்டு மைதானத்திற்கு வருமாறு ஸ்ரீலங்கா கிரிக்கட் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts: