சீன ஓபன் டென்னிஸ்: ரட்வன்ஸ்கா 2ஆவது சுற்றிற்கு முன்னேற்றம்!

Tuesday, October 4th, 2016

சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் 2ஆவது சுற்றுக்கு போலந்து வீராங்கனை அக்னீஸ்கா ரட்வன்ஸ்கா முன்னேறியுள்ளார்.

சீன ஓபன் டென்னிஸ் போட்டிகள் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் சீனாவின் வாங்கியாங்கை எதிர்த்து போலந்து வீராங்கனையான அக்னீஸ்கா ரட்வன்ஸ்கா ஆடினார்.

இப்போட்டியில் ரட்வன்ஸ்கா, 6 -− 2, 6 −- 2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் வீராங்கனை யான கிறிஸ்டினா மாடெனோவிக் 6 -− 3, 5 -− 7, 7 -− 6 என்ற செட் கணக்கில் செர்பியாவின் ஜெலீனா ஜான்கோவிக்கை தோற்கடித்தார்.

coltkn-10-04-fr-14152809321_4842052_03102016_mss_cmy

Related posts: