சிவப்பு அட்டை காட்டியதால் அடித்து கொல்லப்பட்ட நடுவர்!

Wednesday, November 9th, 2016

மெக்சிகோவில் நடந்த கால்பந்து போட்டியில் ரெட் கார்டு காட்டியதால் நடுவர் கால்பந்து வீரர் ஒருவரால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மெக்சிகோவின் Tulancingo நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உள்ளூர் கால்பந்து போட்டிகள் நடந்துள்ளது.

அப்போது அந்தப் போட்டிக்கு நடுவராக செயல்பட்ட Victor Trejo என்பவர் ஒரு வீரருக்கு ரெட் கார்ட் காட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த வீரர் தனது தலையால் Victor முகத்தில் முட்டியுள்ளார்.

இதனால் நிலைகுலைந்து அப்படியே மைதானத்தில் மயங்கி விழுந்த நடுவர் Victor பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவத்திற்கு காரணமான அந்த வீரரின் பெயர் Ruben Rivera Vazquez என தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய அவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.கால்பந்து மைதானத்தில் நடுவர், கால்பந்து வீரர் ஒருவரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: