சில்வா சந்திமல் அபார சதம்! இலங்கை 355 ஓட்டங்கள் குவிப்பு!

Sunday, August 14th, 2016

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ஓட்டங்களை எடுத்துள்ளது.

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் இலங்கை அணி 26 ஓட்டங்களுக்கே 5 விக்கெட்டை இழந்து மோசமான நிலையில் இருந்தது.

இதன் பின்னர் தனன்ஜெய டி சில்வா சதம் அடிக்க, இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தனன்ஜெய டி சில்வா 116 ஓட்டங்களுடனும், சந்திமால் 64 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய டி சில்வா 129 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வந்த சந்திமாலும் சிறப்பாக விளையாடினார். ரங்கன ஹேரத் 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்.

சிறப்பாக ஆடிய சந்திமால் சதம் அடித்தார். அவர் 132 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் வெளியேறினார். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டும், லயன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக வார்னரும், ஷேன் மார்ஷூம் இறங்கினார்கள். வார்னர் 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தற்போது அவுஸ்திரேலியா 1 விக்கெட்டுக்கு 141 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஷான் மார்ஷ் (64), அணித்தலைவர் ஸ்மித் 61) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Related posts: