சில்வா, கருணாரத்ன சிறப்பான ஆரம்பம்; ஸ்திரமான நிலையில் இலங்கை!

Saturday, June 11th, 2016

இங்­கி­லாந்­திற்கு எதி­ரான மூன்­றா­வது டெஸ்ட் போட்­டியில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்­பித்­துள்ள இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்­பிற்கு 162 ஓட்டங்களைப் பெற்று ஸ்திர­மான நிலையில் ஆடி­வ­ரு­கி­றது

லோர்ட்ஸ் மைதா­னத்தில் நேற்று முன்­தினம் ஆரம்­ப­மான இலங்கை மற்றும் இங்கிலாந்து அணி­க­ளுக்­கி­டை­யி­லான மூன்­றா­வதும் கடை­சி­யு­மான டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இங்­கி­லாந்து அணி 416 ஓட்­டங்­களைப் பெற்று சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது.

இதில் அபா­ர­மாக ஆடிய பெயார்ஸ்டோ இறு­தி­வரை ஆட்­ட­மி­ழக்­காமல் களத்தில் நின்று 167 ஓட்­டங்­க­ளைப் பெற்­றுக்­கொண்டார். இங்­கி­லாந்து அணித் தலைவர் குக் 85 ஓட்­டங்­க­ளையும், வோக்ஸ் 66 ஓட்­டங்­க­ளையும் பெற்­றுக்­கொண்­டனர்.

பந்­து­வீச்சில் இலங்கை அணியின் முன்னணி சுழற்­பந்து வீச்­சா­ள­ரான ரங்கன ஹேரத் 4 விக்­கெட்­டுக்­க­ளையும், லக்மால் 3 விக்­கெட்­டுக்­க­ளையும், பிரதீப் 2 விக்கெட்டுக்­க­ளையும் வீழ்த்­தினர்.

தனது முதல் இன்­னிங்ஸை துடுப்­பெ­டுத்­தாடக் கள­மி­றங்­கிய இலங்கை அணிக்கு கருணாரத்ன மற்றும் சில்வா ஆகியோர் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாகக் களமிறங்கினர். இந்த இணை சிறப்­பாகத் துடுப்­பெ­டுத்­தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை ஸ்திர­மான நிலைக்கு உயர்த்­தினர். இதில் இலங்கை 108 ஓட்டங்களைப் பெற்­றி­ருந்த வேளையில் முதல் விக்­கெட்டை இழந்­தது.  50  ஓட்டங்கள் பெற்­றி­ருந்த வேளையில் கரு­ணா­ரத்ன பின்னின் பந்­து­வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதைத் தொடர்ந்து சில்­வா ­வுடன் ஜோடி சேர்ந்தார் மெண் டிஸ். இந்த ஜோடி நிதானமாகத் துடுப்­பெ­டுத்­தாடி ஓட்­டங்­களைச் சேர்த்­தது. இதில் சில்வா 79 ஓட்­ டங்களையும், மெண்டிஸ்25 ஓட்­டங்­க­ளையும் பெற்றிருக்க போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. தற்போது இலங்கை அணி இங்கிலாந்தை விட 254 ஓட்டங்கள் பின்தங்கி யுள்ளமை குறிப்பி டத்தக்கது.

Related posts: