சிறையில் உள்ள தடகள வீரர் பிஸ்டோரியஸ் மணிக்கட்டினை வெட்டினார்?

Sunday, August 7th, 2016

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த தடகள வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தனது காதலியை கொன்ற வழக்கில் 6 வருட சிறை தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.  இந்நிலையில் அவர் தனது மணிக்கட்டினை வெட்டி கொண்டார் என சிறை துறை அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  பிஸ்டோரியஸ் இரு கால்களையும் இழந்த நிலையில் பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று உள்ளார்.

இந்நிலையில், தனது காதலி ரீவா ஸ்டீன்கேம்பினை சுட்டு கொன்ற வழக்கில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.  காதலியை கொல்லும் நோக்கம் இல்லை என்றும் தற்செயலாக இந்த சம்பவம் நடந்து விட்டது என்றும் விசாரணையில் அவர் கூறினார்.

எனினும் உள்நோக்கத்துடனேயே பிஸ்டோரியஸ் சுட்டு உள்ளார் என கூறி அவருக்கு 15 வருட சிறை தண்டனை வழங்க வேண்டும் என அரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.  அவர் மாற்று திறனாளி என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும் என அவரது வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கோரினார்.கடந்த ஜூலையில் அவருக்கு 6 வருட சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.  இதனை தொடர்ந்து அவர் சிறையில் இருக்கிறார்.

Related posts: