சிறையிலிருந்து விடுபட்டது போல் இருந்தது – ரவிசாஸ்திரி!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கண்டியில் நடைபெற்றது முதலில் ஆடிய இலங்கை அணி 236 ஓட்டங்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய இந்திய அணி 131 ஓட்டங்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தால், இலங்கை அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முட்டுகட்டையாக அமையும் என்று கூறப்பட்டது
ஆனால் டோனி மற்றும் புவனேஷ்வர் குமார் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பெறவைத்து அசத்தினர்.இந்த வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் சிறையிலிருந்து விடுபட்டது போல் இருந்தது என பதிவேற்றம் செய்துள்ளார்.
ஏனெனில் இப்போட்டியின் இறுதி கட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என்று பரபரப்பு ஏற்பட்டது, இந்திய அணியிடம் 3 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தது, டோனி வெளியேறினால் அவ்வளவு தான், அதன் காரணமாகவே ரவிசாஸ்திரி இது போன்ற டுவிட்டை போட்டிருக்கலாம் என்றும் அவர் என்பதை பயன்படுத்தியிருந்தார்
Related posts:
|
|