சிறிலங்கா கிரிக்கட்டின் தற்போதைய முகாமையாளருக்கு பதிவு உயர்வு!

Tuesday, April 17th, 2018

அசங்க குருசிங்கவை சிறிலங்கா கிரிக்கட்டின் உயர் செயற்திறன் முகாமையாளராக பதவி உயர்த்தப்படவிருப்பதாக சிறிலங்கா கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா கிரிக்கட்டின் தற்போதைய முகாமையாளராக இருக்கும் அவருக்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இலங்கை கிரிக்கட் தொடர் நிறைவடைந்த பின்னர் பதவி உயர்வுவழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே முன்னதாக சைமன் வில்லிஸ் சிறிலங்கா கிரிக்கட்டின் உயர் செயற்திறன் முகாமையாளராக பதவி வகித்து வந்த நிலையில் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவிவிலகியமை குறிப்பிடத்தக்கது.

Related posts: