சிறந்த வீரர் விருதை தட்டிச்சென்ற மெஸ்சி!

ஃபிபாவின் சிறந்த வீரருக்கான விருதை அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி பெற்றுள்ளார்.
கால்பந்து போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபா ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
இந்நிலையில் நடப்பாண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர் விருதினை, அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி பெற்றுள்ளார். இது அவர் பெறும் 6வது ஃபிபா சிறந்த வீரர் விருதாகும்.
இந்த விருதுக்காக 46 வாக்குகளை பெற்ற மெஸ்சி, போர்ச்சுக்கலின் நட்சத்திர வீரர் ரொனால்டோ மற்றும் வான் டிஜிக் ஆகியோரை பின்னுக்குத் தள்ளினார். மெஸ்சிக்கு போட்டியாளராக கருதப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் இதுவரை 6 முறை ஃபிபா சிறந்த வீரர் விருதினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
T-20 உலகக்கிண்ண சாம்பியன் அணிக்கு 24 கோடி பரிசுத் தொகை
சிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் விடோரிக்கு ஓராண்டு தடை!
விராட் கோலி சதம்: ஆட்டநேர முடிவில் இந்திய அணி 274 ரன்கள் !
|
|