சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரர் விருது வென்ற நெய்மர்!

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2) Wednesday, May 16th, 2018

பிரேசில் பிரபல கால்பந்து வீரரான நெய்மர், கடந்த ஆண்டின் சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர், தற்போது பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த சில மாதங்களாக காயத்தால் அவதிபட்டு வந்த நெய்மார் தற்போது குணமைடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவில் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் அவர் விளையாட உள்ளார்.

இந்நிலையில், திங்கட்கிழமை பாரிஸில் நடந்த விழாவில் சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரருக்கான விருது வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘காயத்தில் இருந்து தற்போது மீண்டு வருகிறேன். பிரேசில் அணிக்காக மீண்டும் எனது பங்களிப்பை, உலகக் கிண்ண தொடரில் வழங்க ஆர்வமாக உள்ளேன்.

PSG அணியை விட்டு விலகும் எண்ணம் எதுவுமில்லை. அந்த அணியிலேயே தொடர்ந்து விளையாடுவேன்’ என தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் நெய்மர் PSG அணிக்காக, 20 லீக் ஆட்டங்களில் விளையாடி 19 கோல்கள் அடித்தார். மேலும், உலகிலேயே மிக அதிகத் தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் நெய்மர் என்பது குறிப்பிடத்தக்கது.


IAAF வழங்கும் ஆறாவது சிறந்த தடகள வீரர் விருதினை தனதாக்கினார் உசேன் போல்ட்!
ஹத்துருசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை இல்லை -  பங்களாதேஸ் கிரிக்கெட் சபை!
பிடியெடுப்பைத் தவறவிட்டதால் வெற்றியையும் தவறவிட்டோம் - புஜாரா!
இனிங்ஸ் வெற்றியை இரண்டே நாளில் சுவைத்த தென்னாபிரிக்கா
கிண்ணம் வென்றது சென். பற்றிக்ஸ்!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!