சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை வென்ற லசித் !

Tuesday, February 11th, 2020

2019 ஆம் ஆண்டுக்கான க்ரிக்இன்போ விருதுகளில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இருவருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் 2019 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்டத்துக்கான விருது இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேராவுக்கு வழங்கப்பட உள்ளது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டேர்பனில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்களை அவர் பெற்று கொண்டார். இதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

அத்துடன் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினை இலங்கை அணியின் லசித் மலிங்க பெற்றுக்கொள்ளவுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக பல்லேகலயில் இடம்பெற்ற மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 5 விக்கட்களை வீழ்த்தியமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: