சிறந்த சகலதுறை வீரராக ஸ்டோக்ஸ் வர முடியும் – பயிற்றுநர் ட்ரெவர் பெய்லிஸ்!

Friday, October 28th, 2016

உலகில் தோன்றிய மிகச்சிறந்த சகலதுறை வீரர்களுள் ஒருவராக, இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் வர முடியமென, அவ்வணியின் பயிற்றுநர் ட்ரெவர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பென் ஸ்டோக்ஸ் வெளிப்படுத்திய திறமை வெளிப்பாட்டைத் தொடர்ந்தே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.சிட்டகொங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஸ்டோக்ஸ், துடுப்பாட்டத்தில் 103 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதன் காரணமாக, போட்டியின் நாயகன் விருதையும் வென்றிருந்தார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள பெய்லிஸ், “உலகில் தோன்றிய மிகச்சிறந்த சகலதுறை வீரர்களுள் ஒருவராக அவர் வர முடியும். அவரது கிரிக்கெட் வாழ்வில், அவர் இன்னமும் இளமையாகவே உள்ளார். இன்னும் காலம் செல்ல, அவரை இன்னும் சிறப்பாகக் கணிக்கக்கூடியதாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “இந்திய உபகண்டத்தில், சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு துடுப்பெடுத்தாடுவதில் அவர் கண்டுள்ள முன்னேற்றங்கள், உயர் ரகமானவை. சிறிது காலத்துக்கு முன்னர் தான், அவர் சுழற்பந்துவீச்சை எவ்வாறு எதிர்கொள்வார் என்று, நாம் சிந்தித்தோம். ஆனால், வலைப்பயிற்சிகளில் அவர், மிகவும் கடுமையாகப் பயிற்சிகளில் ஈடுபடுபவராவார்” என்றும் குறிப்பிட்டார்.

article_1477503414-InStokes_26102016_GPI

Related posts: