சிம்பாபே அணி வெற்றி!

சிம்பாபேவில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியுடன் சிம்பாபே அணி மோதவுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சிம்பாபே இந்த வாய்ப்பை பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் டக்வத் லூயிஸ் அடிப்படையில் சிம்பாபே அணி 05 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி 8 விக்கட்ட இழப்பிற்கு 218 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து டக்வத் லூயிஸ் அடிப்படையில் 130 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.
Related posts:
வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான சங்கத்தை நிறுவ நடவடிக்கை!
பாகிஸ்தான் உலகக் கிண்ண அணியில் ஆமிர் மற்றும் வஹாப் ரியாஸ்!
இலங்கை அணி வெற்றி !
|
|