சிந்துவுக்கு கிடைத்தது வெள்ளிப் பதக்கம்!

Saturday, August 20th, 2016

நடைபெற்றுவரும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பட்மின்டன் இறுதிப் போட்டியில் மிகவும் போராடி தோல்வியடைந்த பிவி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இந்தியாவுக்கு தங்கம் வாங்கித் தருவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். சிந்து அவரோடு விளையாடிய ஸ்பெயின் வீராங்கனை மெரினிடம் 21:19, 12: 21, 15: 21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார்.

21 வயதான சிந்து கலந்து கொள்ளும் முதல் ஒலிம்பிக் போட்டி இதுவாகும். இவரது சாதனை பல ஆண்டுகளான நினைவு கூரப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தமிழ் திரையுலகப் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த், “வாழ்த்துக்கள். நான் உங்களுடைய ரசிகனாகிவிட்டேன்” என்று பாராட்டியிருக்கிறார்.

“நான் உங்களை பற்றி பெருமை கொள்கின்றேன். நீங்கள் இந்தியர் அனைவரையும் பெருமைப்படுத்தி விட்டீர்கள்”, என்று ஹிந்தி திரை நட்சத்திரம் அபிதாப் பச்சன் தெரிவித்திருக்கிறார். மிகவும் இளம் வீராங்கனையாக சிந்து படைத்திருக்கும் சாதனையை பாராட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவித்த வண்ணம் இருக்கின்றன.

Related posts: