சிட்னி சர்வதேச டென்னிஸ் ­- வொஸ்னியாக்கி வெற்றி!

89col141329552_5150473_10012017_AFF_CMY Wednesday, January 11th, 2017

சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னாள் முதல்தர வீராங்கனை கரோலின் வொஸ்னியாக்கி மோனிகா புய்க்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முன்னாள் முதனிலை வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சம்பியன் மோனிகா புய்க்கை (புயர்டோரிகா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் சிபுல்கோவா (சுலோவக்கியா) 6-2, 6-0 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் லாராவை எளிதில் தோற்கடித்த அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

89col141329552_5150473_10012017_AFF_CMY


2007 ஆம் ஆண்டின் பின்னர் முதன்முறையாக அரையிறுதி வாய்ப்பை இழந்தது  இலங்கை!
200 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றார் எலினே தொம்ஸன்!
மேலும் இரு அமெரிக்க நீச்சல் வீரர்கள் நாடு திரும்பினர்!
ஆஸ்திரேலிய ஓபன்: விலகினார் டெல் போட்ரோ!
கால் பந்தாட்ட மைதானத்தில் கூட்ட நெரிசல்: அங்கோலாவில் 17 பேர் உடல் நசுங்கி பலி!