சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நேவால்!

Monday, June 13th, 2016

ஆஸ்திரேலியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக வென்ற சாய்னாவிற்கு பிரதமர் மோடி, சச்சின் உள்பட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் சன் யூவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இதன்மூலம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சாய்னா நேவாலுக்கு பிரதமர் மோடி மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உள்பட பல பிரபலங்கள் டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் வாழ்த்து செய்தியில் ‘‘இது ஒரு பிரமாண்ட வெற்றி. உங்களுடைய விளையாட்டுச் சாதனைகள் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமையைடைகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘‘ஆஸ்திரேலியா ஓபனை 2-வது முறையாக வென்றதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமையடைகிறது. ரியோவில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்’’ என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

‘‘நீங்கள் தொடர்ந்து இந்தியர்களுக்கு பெருமைகளை சேர்த்து வருகிறீர்கள். ஆஸி. ஓபனை வென்றதற்கு வாழ்த்துக்கள்’’ என அமிதாப் பச்சன் வாழ்த்தியுள்ளார்.

“சாய்னா மிகச் சிறந்த பெண். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்முடைய நாடடிற்கு பெருமைகள் சேர்க்க வேண்டும்’’ என்று ஷாரூக்கான் தெரிவித்துள்ளார்.

‘2-வது முறையாக ஆஸி. ஓபனை வென்றதன் மூலம் இந்தியாவிற்கு பெருமையை உருவாக்கி தந்துள்ளார்’ என மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், லஷ்மண், யுவராஜ் சிங், தவான் போன்றோரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய பேட்மிண்டன் கழகம் அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக கூறியுள்ளது

Related posts: