சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் செர்ஜியோ அகுயேரோ அடித்த ஹட்ரிக் கோல்களின் உதவியால் மான்செஸ்டர் சிட்டி அணி பொரூஷியா அணியை வென்றது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியும் பொரூஷியா அணியும் மோதின. இப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ஆடிய அர்ஜென்டினா வீரர் செர்ஜியோ அகுயேரோ ஆட்டத்தின் ஆரம்பம் முதலே எதிரணியின் கோல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல்களை நடத்தினார்.
முதல் பாதி ஆட்டத்தில் 2 கோல்களையும், இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஒரு கோலையும் அடித்த இவர், ஹாட்ரிக் சாதனை படைத்தார். அவரது ஹாட்ரிக் சாதனையின் உதவியால் மான்செஸ்டர் சிட்டி அணி 4 – 0 என்ற கோல்கணக்கில் போட்டியை வென்றது. மாட்ரிட் நகரில் நடந்த மற்றொரு சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் லிஸ்பன் அணியுடன் ரியல் மாட்ரிட் அணி மோதியது. கடும் போட்டியைக் கொண்ட இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணிக்கு சவால் விடும் வகையில் லிஸ்பன் அணி ஆடியது. எனினும் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
Related posts:
|
|