சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் !
Thursday, May 25th, 2017இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள சாம்பியன்ஸ் வெற்றிக் கிண்ணப் போட்டி மற்றும் மகளிர் ஒரு நாள் சர்வதேச சாம்பியன்ஸ் வெற்றிக் கிண்ணப் போட்டி ஆகியவற்றுக்கான பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இங்கிலாந்தில் மென்செஸ்டர் நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து குறித்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போட்டிகளில் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிப்பாளர்களின் ஆலோசனைக்கு அமைவாக மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது
Related posts:
முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி!
கோஹ்லியின் சாதனையை தகர்த்த தென் ஆப்பிரிக்க வீரர்!
இந்தியன் ப்ரீமியர் லீக் - பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றது ரோயல் செலஞ்ர்ஸ் பெங்களூரு அணி!
|
|