சாம்பியன்ஸ் கிண்ணத்தை இலங்கை அணி வெல்லும் – ஜாம்பவான் நம்பிக்கை!

Saturday, May 6th, 2017

நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண தொடரை திறமையான வீரர்கள் நிறைந்த இலங்கை அணி கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளதாக தென் ஆப்ரிக்க ஜாம்பவானும், இலங்கை இடைக்கால பந்துவீச்சு பயிற்சியாளருமான ஆலன் டொனால்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2017 சாம்பியன்ஸ் கிண்ணத்தொடர் எதிர்வரும் யூன் 1ம் திகதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக இலங்கை அணிக்கு சிறப்பு பயிற்சியளிக்க தென் ஆப்ரிக்கா ஜாம்பவான் ஆலன் டொனால்ட் ஏப்ரல் 30ம் திகதி இலங்கை வந்தார்.

இலங்கை அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். சிறப்பாக பந்துவீச்சாளர்களும் உள்ளனர். இதன் மூலம் சாம்பியன்ஸ் கிண்ணத்தொடரை இலங்கை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.50 வயதான டொனால்ட், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சாமந்தி வாஸ், சம்பாமா ராமநாயக்க, ரவீந்திர புஷ்பகுமார மற்றும் நுவன் சோய்சா ஆகியோருடன் இணைந்து செயற்படவுள்ளார்.

Related posts: