சாமுவேல்ஸ் பந்துவீச ஐசிசி அனுமதி!

Friday, February 17th, 2017

மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் சாமுவேல்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்துவீச அனுமதியளித்துள்ளது ஐசிசி.

முன்னதாக அவர் விதிமுறைக்கு புறம்பாக பந்துவீசுவதாகக் கூறி தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி சாமுவேல்ஸ் பந்துவீசும் முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அவர் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பந்துவீச அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சாமுவேல்ஸ், கடைசியாக நவம்பர் 2016-ல் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். பிறகு ஜிம்பாப்வே-வில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் அவர் நீக்கப்பட்டார். மார்ச்சில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. அதில் சாமுவேல்ஸ் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

201702171303148527_Samuels-cleared-to-bowl-in-internationals-by-the-ICC_SECVPF

Related posts: