சானியா ஜோடி அரையிறுதியில் தோல்வி!

Sunday, August 14th, 2016

ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையருக்கான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா, போப்பண்ணா ஜோடி தோல்வியடைந்தது.

ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் தொடரில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் களமிறங்கிய இந்திய வீரர்கள் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றமளித்தனர். இந்நிலையில், டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா, ரோகன் போப்பண்ணா ஜோடி, அமெரிக்காவை சேர்ந்த வீனஸ், ராஜீவ் ராம் ஜோடியை சந்தித்தது.

இதில் இந்திய ஜோடி 6-2, 2-6, 3-10 என்ற செட்களில், அமெரிக்க ஜோடியிடம் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இந்திய ஜோடி. ஆனால் வெண்கல பதக்கம் வெல்வதற்கான ஆட்டத்தில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.நடைபெற இருக்கும் இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி வெற்றி பெறும் பட்சத்தில் வெண்கல பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

Related posts: