சானியாவுக்க சத்திரசிகிச்சை!

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷாவிற்கு முழங்காலில் சத்திரசிக்சை ஒன்று மேற்கொள்ளப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சீன பகிரங்க டென்னிஸ் தொடரை அடுத்து காயத்தினால் பாதிக்கப்பட்ட அவர், ஒரு மாதகாலமாக விளையாடாதிருந்தார். தற்போது சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும், இது குறித்து மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ளவிருப்பதாகவும் மிர்ஷா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இரட்டையர் பிரிவின் தரவரிசையில் 1ம் இடத்தில் ஆரம்பித்த மிர்ஷா தற்போது 12ம் இடத்தில் உள்ளார். அவரது ஜோடியான மார்டினா ஹிங்கிஸை பிரிந்த பின்னர் அவர் தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக தினேஷ் சண்டிமால்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை - முதலிடம் பிடித்த இந்திய அணி!
இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டித் தொடர் ஒத்தி வைப்பு!
|
|