சாதிப்போம் – இலங்கை கிரிக்கெட் அணி தலைவி ஹாசினி உறுதி!

Friday, November 25th, 2016

ஆசிய கிண்ணம் டி 20 போட்டிகளில் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி நிச்சயம் நன்றாக விளையாடி சாதிக்கும் என அந்த அணியின் தலைவி ஹாசினி பெரேரா நம்பிக்கை தெரிவிவித்துள்ளார்.

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நாளை பெண்களுக்கான் ஆசிய கிண்ணப் போட்டிகள் தொடங்கவிருக்கிறது.இதற்காக இலங்கை அணியின் வீராங்கனைகள் இன்று காலை பாங்காக்குக்கு புறப்பட்டு சென்றார்கள்.

அதற்கு முன்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த இலங்கை அணியின் தலைவி ஹாசினி கூறியதாவது, நடக்கவிருக்கும் ஆசிய கிண்ண போட்டிகளுக்கு நாங்கள் முழு வீச்சில் தயாராகி உள்ளோம்.

மிக சிறந்த அணியை தேர்வு செய்த தேர்வு குழுவுக்கு நன்றி தெரிப்பதாகவும், எங்கள் அணி நிச்சயம் நன்றாக விளையாடி ஆசிய போட்டிகளில் சாதிக்கும் எனவும் கூறியுள்ளார்.

இலங்கை அணியின் பயிற்சியாளர் ஹேமாந்தா தேவிபிரியா கூறுகையில், எங்கள் அணியின் திறமையை நிருபிக்க இந்த போட்டிகள் நல்ல வாய்ப்பாக இருக்கும் என தான் கருதுவதாகவும், சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் தங்கள் நிறை, குறைகளை கண்டறிந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்காத உதிஷிகா, யசோதா மெண்டீஸ், இஷாமி லோகுசூர்யா ஆகிய மூவரும் ஆசிய கிண்ண தொடரில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: