சாதித்து காட்டிய தரங்கவிற்கு வந்து குவியும் வாழ்த்துக்கள்!
Wednesday, November 30th, 2016இலங்கை அணி அண்மையில் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர் மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடியது.
டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி முத்தரப்பு ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இத்தொடரில் இலங்கை அணியின் தலைவராக இளம் வீரர் உபுல் தரங்கா தெரிவு செய்யப்பட்டார்.அவர் தலைமையிலான இலங்கை அணியும் தொடரை வெற்றிகரமாக முடித்தது. இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ஜெயசூர்யா மற்றும் டில்சானுக்கு பிறகு இலங்கை அணியின் தலைவராக தரங்கா சாதித்து காட்டியுள்ளார்.
Upul Tharanga is third Sri Lankan to win a ODI tournament on first assignment as captain, after S Jayasuriya & T Dilshan.#SLvZIM #Triseries
இதற்கு முன்னர் இலங்கை அணியின் தலைவராக ஜெயசூர்யா பதவி வகித்த போது முதல் தொடரை வெற்றிகரமாக முடித்தார், அதே போன்று டில்சானும் வெற்றிகரமாக முடித்தார்.
அதற்கு பின்னர் தற்போது இலங்கை அணியின் தலைவராக பதவி ஏற்று முதல் தொடரை தரங்கா வெற்றிகராமாக முடித்துள்ளார்.இதைத் தொடர்ந்து தொடரை வெற்றிகரமாக முடித்த இவருக்கு ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே மற்றும் இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|