சாதனை வீரரானார் அசாத் ஷபிக்!

Monday, December 19th, 2016

பாகிஸ்தான் அணி வீரர் அசாத் ஷபிக் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளர்

இவர் 6-வது நபராக களம் இறங்கி 9 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.பாகிஸ்தான் அணியின் 6-வது வீரராக களம் இறங்கிய அசாத் ஷபிக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

இதற்கு முன் கேரி சோபர்ஸ் 8 சதங்கள் அடித்ததே அதிகபட்ச சதமாக இருந்தது.அத்தோடு வெஸ்ட் இண்டீஸ் அணியின் சந்தர்பால், டோனி கிரேக், ரிக்கி பாண்டிங், திலகரத்னே ஆகியோர் தலா 7 சதங்கள் அடித்துள்ளனர்.

அசாத் ஷபிக் 137 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஸ்டார்கின் பந்துவீச்சில் வார்னரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தமை குறிப்பித்தக்கது.அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 490 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.4-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 382 ஓட்டங்கள் குவித்துள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: