சாதனை படைத்த தம்பதி!
Saturday, October 21st, 2017
உலக வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் கணவனும், மனைவியும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.அமெரிக்கா ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியிலேயே இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
கடந்த 14ம் திகதி நடந்த இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் அலி பிராங் என்பவரும், பெண்கள் பிரிவில் எல் தயெப் என்பவரும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர்.இவர்கள் இருவரும் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர், இவர்களுக்கு இதுவே முதல் உலகளாவிய போட்டியாகும்.இது ஒரு கனவு போன்ற அனுபவம், நாங்கள் இருவரும் இணைந்து பெறப்போகும் வெற்றிகளில் இதுவே முதல் என மகிழ்கின்றனர்.
Related posts:
யுவராஜ் சிங்குக்கு 3 கோடி ரூபாய் பாக்கி !
மண் கவ்வியது ராஜஸ்தான்!
ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் - உலகக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது கட்டார் !
|
|