சாதனை படைத்த உபுல் தரங்கா!

Tuesday, December 19th, 2017

தொடரை இழந்த நிலையிலும் புதிய சாதனை படைத்து உபுல் தரங்கா!இவ் ஆண்டில் 1000 ஓட்டங்களை கடந்த மூன்றாவது சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை உபுல் தரங்கா படைத்துள்ளார்.

இலங்கை – இந்தியா இடையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இந்த போட்டியில் இலங்கை வீரர் உபுல் தரங்கா அபாரமாக விளையாடி 95 ஓட்டங்கள் குவித்தார்.இதன் மூலம் தரங்கா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.அதாவது 2017-ல் 1000 ஓட்டங்களை கடந்த மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இந்தாண்டில் 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தரங்கா மொத்தம் 1011 ஓட்டங்கள் குவித்துள்ளார்.இந்த பட்டியலில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி 26 போட்டிகளில் 1460 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், ரோகித் சர்மா 21 போட்டிகளில் 1286 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

Related posts: