சாதனை படைத்த இலங்கை!

000_QN028-720x450-300x188 Thursday, October 12th, 2017

இலங்கை அணி, பாகிஸ்தனை அதன் சொந்த மண்ணாக கருதப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில் வீழ்த்தியது மட்டுமின்றி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளதால், 2010-க்கு பின்னர் பாகிஸ்தான் அணியை ஐக்கிய அரபு எமிரேட்சில் வீழ்த்தி தொடரை கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனையை இலங்கை படைத்துள்ளது

பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது

இவ்விரு அணிகளுக்கிடையே நடந்த 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது

கடந்த 2009-ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதால், அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள எந்த கிரிக்கெட் அணியும் இதுவரை முன்வரவில்லை.

இதனால் பாகிஸ்தான் அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸை தனது சொந்த மண்ணாக கருதி அங்கு போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் அங்கு நடந்த டெஸ்ட் தொடர்களில் பாகிஸ்தான் அணி இதுவரை இழந்ததில்லை என்ற பெருமையை பெற்றிருந்தது


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!