சாதனையை முறியடித்த இந்திய மகளிர் அணி!

57ae2035dadcc90616dd274842d1e108_XL Wednesday, May 17th, 2017

அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி ஆரம்ப விக்கட்டுக்காக 320 ஓட்டங்களை பகிர்ந்து சாதனை படைத்துள்ளது.

இந்திய மகளிர் அணியின் டீப்டி சர்மா 188 ஓட்டங்களையும், பூனம் ரவுட் 109 ஓட்டங்களையும் குவித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதற்கு முன்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் சாரா டெய்லர் மற்றும் கரோலின் அட்கின்ஸ் பெற்ற 268 ஓட்டங்களே அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது.

இதேவேளை ஆண்களுக்கான ஒருநாள் போட்டியொன்றில்  உபுல் தரங்க மற்றும் சனத் ஜயசூரிய பெற்ற 286 ஓட்டங்களே அதிகூடிய இணைப்பாட்டமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!