சாதனையை முறியடித்தார் அஸ்வின்!

Tuesday, August 23rd, 2016

மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று முன்னிலை வகித்தது.நான்காம் போட்டி வியாழன் அன்று தொடங்கியது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி நாணய சுழற்றியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது.

முதல் நாள் அரை மணி நேரம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட போட்டியில் மழை குறுக்கிட 22 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. அடுத்த நான்கு நாட்கள் மழை பெய்யாத போதும் ஆட்டம் நடைபெறவில்லை. மழையால் சேதமடைந்த மைதானத்தை, மீட்டெடுக்க முடியாமல் தொடர்ந்து நான்கு நாட்களும் வெறுமனே கழிந்தது. இறுதியாக , போட்டி  டிராவில் முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

குறித்த தொடரின் மூலம் இந்திய வீரர் ஒருவர் அதிக முறை தொடர்நாயகன் விருது வென்றவர் என்ற சாதனையை முறியடித்தார். ஆறு முறை வென்றுள்ள இவர் சச்சின், சேவக் சாதனையை முறியடித்துள்ளார்.

நாங்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த மட்டுமே,இங்கு வந்தோம்.  ஐந்து பவுலர்களுடன் விளையாட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தோம்.ஒருவருக்கொருவர் சிறப்பாக செயல்படும் போது பாராட்டிக்கொள்கிறோம். அணி சிறப்பாக செயல்படுவதற்கு இது முக்கியமானதொரு காரணம்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் , ஆஸ்திரேலிய அணி தோற்றது. அதன் எதிரொலியாக , முதலாவது இடத்தை இந்தியாவிடம் இழந்தது. அந்தத் தொடரின் முடிவில், இந்தியா 112 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நான்காவது டெஸ்ட் போட்டி, டிராவில் முடிந்ததால், தற்போது பாகிஸ்தான் அணி , முதல் இடத்தில் இருக்கிறது.

அது பற்றி கருத்து கூறிய கோலி “ஜிம்மிலும், பிளே ஸ்டேஷனிலும், கடந்த நான்கு நாட்களும் கழிந்தது. ஒவ்வொரு நாளும், அந்த நாட்டின் நேரப்படி எழுந்து ஒன்றுமே செய்யாமல் இருக்க வேண்டும் என்பது மிகவும் சோர்வடைய வைத்தது. முதல் இடம் என்பது மிகவும் குறைவான காலம் மட்டுமே இருக்கும்  என முன்னரே தெரியும். எங்களைவிட பிற அணிகள் , 10 போட்டிகள் அதிகமாக விளையாடி இருக்கிறார்கள்.தரவரிசைப் பட்டியல் என்பது  மாறிக்கொண்டே தான் இருக்கும்” என்றார்.

டெஸ்ட் தொடருக்குப் பின், அமெரிக்காவில் இரு டி20 போட்டிகளில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் விளையாட இருக்கிறது இந்தியா.  இந்தியா அதன் அடுத்த 9 டெஸ்ட் போட்டிகளை உள்நாட்டில் விளையாட இருப்பதால், டெஸ்ட் ரேக்கிங்கில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Related posts: