சாதனைப் புத்தகத்தின் பக்கங்களை மீண்டும் புதுப்பித்தார் சங்கா !

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றுமோர் புதிய சாதனையை சாதனைப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் மைதான போட்டிகளில் ‘‘A’’ பிரிவில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் 19,000 புள்ளிகளை கடந்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையையே அவர் பதிவிட்டுள்ளார்..
அத்துடன் குறித்த பிரிவின் தரப்படுத்தலில் சங்காவிற்கு உலகில் 4வது இடம் கிடைக்கப் பெற்றுள்ளமையும் விசேடமானது. இதில் இலங்கையின் மற்றுமொரு முன்னாள் வீரர் சனத் ஜெயசூரிய 8வது இடத்திலும் உள்ளார்.சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள், டெஸ்ட் மற்றும் முதல் வகுப்பு வெளிநாட்டு அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடும் ஓவர் 40 இற்கு அதிகமான ஒருநாள் போட்டி ‘‘A’’ பிரிவுக்கு உள்ளாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆப்கான் அதிரடி: போராடி வென்றது தென்னாப்பிரிக்கா!
தரவரிசையில் முதலிடம் பெற்ற யாசீர் ஷா!
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிக்கான நிதியை ஒதுக்க பி.சி.சி.ஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!
|
|