சாகச விளையாட்டுக்கள் தொடர்பான தேசிய நியமங்களை வகுக்க நடவடிக்கை!

Saturday, April 22nd, 2017

சர்வதேச தராதரங்களுக்கு அமைவாக Adventure sports எனப்படும் சாகச விளையாட்டுக்கள் தொடர்பான தேசிய நியமங்களை வகுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் மத்திய செயற்றிட்ட முகாமைத்துவ பிரிவு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி சபை இணைந்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக சாகச விளையாட்டுகள் பற்றிய விபரங்கள் இணையத்தளத்தில் பட்டியலிடப்படும். இந்த விளையாட்டுகளில் பங்கேற்போரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைககளும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: