சவுதி அரேபிய விரருக்கு தடை!

Wednesday, September 14th, 2016

ரியோ பாராலிம்பிக்கில் பங்கேற்ற சவுதிஅரேபிய பழுதூக்கும் வீரர் மஷால் அல்கசாய் இரண்டாவது சோதனையிலும் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளார்.

36 வயதான அல்கசாய் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததை அடுத்து மாற்றுத் திறனாளர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் 107 கிலோகிராம் எடைப்பிரிவில் தொடர்ந்து பங்கேற்க முடியாது என்று சர்வதேச பாராலிம்பிக் குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் அவரால் 2024, செப்டெம்பர் 12ஆம் திகதி வரை போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

85924693_rio_logo_getty

Related posts: