சர்வதேச மெய்வல்லுனர் போட்டிக்கு நிமாலி லியனாராச்சி தகுதி!

Wednesday, July 12th, 2017

இலண்டனில் நடைபெறவுள்ள உலக சம்பியன் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிக்கு வீராங்கனை நிமாலி லியனாராச்சி தகுதி பெற்றுள்ளார்.

ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிய இலங்கை அணியை விளையாட்டு அலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற வரவேற்கும் வைபவத்தில் கலந்துகொண்டு இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஒடிஸா நகரில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் போட்டிப் பிரிவில் நிமாலி லியனாராச்சி தங்கப்பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: