சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் ரகுநாத்!

Wednesday, August 2nd, 2017

சர்வதேச ஹொக்கி போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக ரியோ ஒலிம்பிக்கில் பிரகாசித்தவரும், அகில இந்திய ஹொக்கி போட்டியின் பெங்களூர் அணி வீரருமான ரகுநாத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இளம் வீரர்களுடன் சரியான திசையில் பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், இதுவே தனது ஓய்விற்கான உரிய தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி எதிர்வரும் சில மாதங்களுக்குள் தனது ஓய்வு குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.தனது ஓய்விற்காக மனதளவில் தயாராகிவிட்டதாகக் குறிப்பிட்ட ரகுநாத், விரைவில் இது தொடர்பாக பயிற்சியாளர் ரோலண்ட் ஒல்ட்மான்ஸ்சுடன் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.28 வயதான ரகுநாத், 10 வருடங்களுக்கு மேலாக இந்திய அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: