சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டம் – அமைச்சர் நாமல் ராஜபக்ச!

கொழும்பு – 07, டொரின்டன் மாவத்தையில் அமைந்துள்ள தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தை தியகம விளையாட்டு தொகுதி வளாகத்துடன் இணைத்து சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அமைச்சர் நாமல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் விளையாட்டு கலாசாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக சிறு பிள்ளகைள் விளையாடுகின்ற இடங்களை தேடிச் சென்று விளையாட்டு மைதானங்களை அமைக்க வேண்டுமென்று நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான விளையாட்டு மைதானங்களை ஒரு நிறுவனத்தின் கீழ் நிர்வகித்தல், முழுமையான வசதிகளைக்கொண்ட விளையாட்டுப் பாடசாலைகள் 25 ஐ உருவாக்குதல், விளையாட்டு சட்டத்திற்கு புதிய முன்மொழிவுகளை உள்ளடக்குதல் மற்றும் புதிய சட்டமொன்றை தயாரித்தல், விளையாட்டின் மேம்பாட்டிற்காக தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக கடந்த மாதத்தில் தமது அமைச்சு அவதானம் செலுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார் பிரதேச ரீதியாக விளையாட்டை முன்னேற்றுதலின் அவசியம் பற்றி இராஜாங்க அமைச்சர் தேனுக்க வித்தானகமகே சுட்டிக்காட்டினார். கிராமிய ரீதியாக அதிகம் கவரக்கூடிய அந்தந்த மாகாணங்களில் பிரபல்யமான விளைாட்டுக்களை இனங்கண்டு அதற்கு தகுதியான திறமையான விளைாட்டு வீரர்களுக்கு உடனடியாக பயிற்சியளிக்க வேண்டுமென்றும் ஆலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|