சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கிறிஸ் கெய்ல் ஓய்வு!

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உலக கிண்ண போட்டிகளின் பின்னர், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தான் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
39 வயதுடைய கிறிஸ் கெய்ல் 284 ஒருநாள் போட்டியில் விளையாடி, 9,727 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு, அதில், 23 சதங்கள், ஒரு இரட்டை சதம் மற்றும் 49 அரை சதங்களும் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒலிம்பிக்கில் நெய்மார் சாதனை!
ராஜ்கோட் போட்டிக்கு நிதி ஒதுக்க வேண்டும் - கிரிக்கெட் சபை உச்ச நீதிமன்றில் மனு!
பங்களதேஷ் பந்து வீச்சாளர்களுக்கு 10 ஆண்டுகள் தடை!
|
|