சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஹால் ஆஃப் ஃபேம்விருதை வென்ற அரவிந்த டி சில்வா நாட்டை வந்தடைந்தார்!

Saturday, November 18th, 2023

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) விருது பெற்ற இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா இன்று (18) காலை நாட்டை வந்தடைந்தார்.

கடந்த 13ஆம் திகதி இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு குறித்த விருது வழங்கப்பட்டது.

இலங்கை அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அரவிந்த டி சில்வா 6,361 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அத்துடன், 308 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அரவிந்த டி சில்வா 9,284 ரன்களை இலங்கை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

இதுதவிர, 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக அரவிந்த டி சில்வா ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: