சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பீட்டர் சிடில் ஓய்வு!

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பீட்டர் சிடில் அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டில் சிடில். 35 வயதான இவர் நியூசிலாந்துக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்தார்.
ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தின்போது தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆன பீட்டர் சிடில் 67 டெஸ்டில் விளையாடி 221 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். கடைசியாக ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மெஸ்ஸிக்கு அபராதம் - போட்டியில் விளையாடவும் தடை!
மறுக்கிறது பாகிஸ்தான்!
உலக கிண்ணம் பிற்போடப்பட்டால் ஆஸி வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பர் - டேவிட் வோர்னர்!
|
|