சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து லசித் மாலிங்க ஓய்வு?

Wednesday, July 11th, 2018

இலங்கை அணியின் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகளவு திறமையுடைய இவரை தற்போதைய தேர்வுக் குழு தொடர்ந்தும் புறக்கணிப்பதே குறித்த தீர்மானத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள லசித் மாலிங்க நாடு திரும்பியதும் ஊடகங்களுக்கு இதுகுறித்து அறியப்படுத்த உள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.