சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் ராயுடு!

Thursday, July 4th, 2019

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் அம்பதி ராயுடு அறிவித்துள்ளார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு வீரர்கள் காயம் காரணமாக விலகியும், 33 வயதான ராயுடு-விற்கு வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், திடீரென தனது ஓய்வை அறிவித்து அதிரச்சிக்குள்ளாகியுள்ளார். தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த் அணியில் இணைக்கப்பட்டார். விஜய் சங்கருக்கு பதிலாக ராயுடுக்கு அழைப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக மயான்க் அகர்வால் அணியில் இணைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் ஆணையம், ராயுடுவை கண்டுக்கொள்ளாததால் நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்தனர். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள ராயுடு, ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என தெரிவித்துள்ளார். எனினும், ஓய்வுக்கான காரணத்தை ராயுடு அறிவிக்கவில்லை.

இதுவரை 50 ஒரு நாள் போட்டி இன்னிங்ஸில் விளையாடி உள்ள ராயுடு, 3 சதம், 10 அரைசதம் என 1694 ஓட்டங்கள் எடுத்துள்ளார். ஐந்து டி20 இன்னிங்ஸில் விளையாடி உள்ள ராயுடு 42 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

Related posts: