சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து சயிட் அஜ்மல் ஓய்வு?

Wednesday, November 15th, 2017

பாகிஸ்தான் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான சயிட் அஜ்மல் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளார்.

பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள உள்ளூர் இருபதுக்கு 20 போட்டிக்கு பின்னர் அவர் ஓய்வுபெற தீர்மானித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் சயிட் அஜ்மல் பங்கேற்றார்.2009 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் ஊடாகவே  சயிட் அஜ்மல் டெஸ்ட் போட்டிகளுக்குள் நுழைந்தார்.

2015 ஆம் ஆண்டு பங்களாதேஸ் அணியுடன் இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியின் பின்னர் அவரது பந்து வீச்சு பாணியில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தேசிய அணியில் இருந்து விலக வேண்டி நிலை ஏற்பட்டது. 40 வயதான சயிட் அஜ்மல், 35 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 178 விக்கட்டுக்களையும், 113 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 184 விக்கட்டுக்களையும், 64 இருபதுக்கு 20 போட்டிகளில் கலந்து கொண்டு 85 விக்கட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: