சர்வதேச கிரிக்கட் பேரவை அதிரடி: இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் கிரிக்கெற் நிர்வாகங்கள் திணறல்!

Wednesday, May 30th, 2018

கிரிக்கட்டில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் வழங்குமாறு, உரிய தரப்பிடம் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் எதிர்ப்பு பிரிவு கோரியுள்ளதாக அதன் பொதுமுகாமையாளர் அலெக்ஸ் மார்சல் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கிரிக்கட்டை மையப்படுத்தி இடம்பெற்ற மோசடிகள் குறித்து அல்ஜசீரா ஊடகம் அண்மையில் தகவல் வெளியிட்டது.

கடந்த காலங்களில் இவ்வாறான மோசடிகள் குறித்த ஆதாரங்களை கோரிய போதும் அவை வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகின்ற நிலையில், குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நாடுகள் மற்றும் நபர்கள் தொடர்பில் தனித்தனியே அவதானம் செலுத்தப்படும் என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

Related posts: