சர்வதேச கிரிக்கட் சபையால் அவமானப்படுத்தப்ப்ட்ட பாகிஸ்தான் அணி!

Thursday, December 14th, 2017

வருகின்ற 5 ஆண்டுகளுக்கான போட்டி அட்டவணை சர்வதேச கிரிக்கட் சபையான ஐ.சி.சியால் வெளியிடப்பட்டிருந்தது,. இந்த அட்டவணையின் பிரகாரம் அதிக போட்டிகளை பங்குகொள்ளும் அணியாக இந்திய அணி இனங்காணப்பட்டுள்ள அதேவேளை, மிகவும் குறைவான போட்டிகளில் பங்குகொள்ளும் அணியாக பாக்கிஸ்தான் அணி காணப்படுகின்றது. புதிதாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளைக்காட்டிலும் பாக்கிஸ்தான் பங்குகொள்ளும் போட்டிகளின் எண்ணிக்கை குறைவானதாகும்.

இந்திய அணியைப்பொறுத்வரை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா முதலான முன்ணணி அணிகளோடு போட்டி அட்டவணையை வெளியிட்டிருந்தது. இதனடிப்படையில் வருகின்ற 2019-2023 வரையான 4 வருடகால இடைவெளியில் மொத்தமாக 81 சர்வதேச போட்டிகளில் சொந்த மைதானத்தில் விளையாடவுள்ளது.

பாக்கிஸ்தானைக்கு இதுவரை 22 போட்டிகளே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை, நியூஸிலாந்து, மேற்கிந்திய தீவுவுகள் தலா 29 போட்டிகளையும், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகள் 30ற்கு அதிகமான போட்டிகளில் பங்குகொள்ள இருக்கின்றன.

சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்ட பாக்கிஸ்தான் அணிக்கு ஐ.சி.சியின் அட்டவணை அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாக்கிஸ்தான் அணி இரசிகர்கள் மத்தியில் ஐ.சி.சியின் அட்டவணை பெரும் விமர்சனத்திகுள்ளாகியுள்ளது.

Related posts: