சர்வதேசப் போட்டிகளில் சச்சின், டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து தோனி!

Saturday, July 7th, 2018

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தற்போதைய இளம் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து 3ஆவது இந்தியராக மகேந்திர சிங் தோனி சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு 500ஆவது போட்டியாக அமைந்தது. மேலும் இவர் உலகளவில் இந்த மைல்கல்லை எட்டிய 9ஆவது வீரராகவும் திகழ்கிறார்.
இதுவரை 90 டெஸ்ட், 318 ஒருநாள் மற்றும் 92 டி 20 போட்டிகளில் தோனி பங்கேற்றுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
டெஸ்ட் போட்டிகளில் 6 சதம், 33 அரைச்சதம் உட்பட 4,876 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 10 சதம், 67 அரைச்சதம் உட்பட 9,967 ரன்களும், டி 20 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 1,455 ரன்களும் குவித்துள்ளார். மேலும் மொத்தம் 602 கேட்சுகளும், 178 ஸ்டம்பிங்குகளும் செய்துள்ளார்.
இந்த வரிசையில் 200 டெஸ்ட், 463 ஒருநாள், மற்றும் ஒரு டி 20யுடன் 664 போட்டிகளுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், 164 டெஸ்ட், 344 ஒருநாள் மற்றும் ஒரு டி20-யுடன் 509 போட்டிகளுடன் ராகுல் டிராவிட் 8ஆவது இடத்திலும் உள்ளனர்.
500 சர்வதேசப் போட்டிகளுக்கு மேல் பங்கேற்ற வீரர்களின் விவரம் பின்வருமாறு:
• சச்சின் டெண்டுல்கர் – 664
• மஹேல ஜெயவர்த்தன – 652
• குமார் சங்ககாரா – 594
• சனத் ஜெயசூர்யா – 586
• ரிக்கி பாண்டிங் – 560
• ஷாஹித் அஃப்ரிடி – 524
• ஜாக்கஸ் கலீஸ் – 519
• ராகுல் டிராவிட் – 509
• மகேந்திர சிங் தோனி – 500*

Related posts: