சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கிரக்கட் வீரர்களின் முகவர்கள் – விளையாட்டுத்துறை அமைச்சர்!

Saturday, July 8th, 2017

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் தனிப்பட்ட முகவர்களை கொண்டுள்ளமை குறித்து அறிக்கை வழங்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்துக்கு இதற்கான அறிவுறுத்தலை அவர் விடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கிரிக்கட் வீரர்கள் சிலர் சார்ள்ஸ் ஒஸ்டின் என்ற ஒருவரை தங்களது முகவர்களாக பேணி வந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இவ்வாறு ஐந்து முகவர்கள் செயற்படுகின்றமை தெரியவந்துள்ளது. அவர்களே இலங்கை கிரிக்கட் வீரர்களின் விளம்பரங்கள், மக்கள் தொடர்பு, கிரிக்கட் ஒப்பந்தங்கள் போன்ற விடயங்களை கவனித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையிலேயே அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இந்த அறிக்கையை கோரியுள்ளார்

Related posts: