சர்ச்சைகளை சாதனையாக்கியவர்- மஹேல!
Sunday, September 25th, 2016இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரான தெனகமகே பிரபாத் மஹேல ஜயவர்தன அல்லது மஹேல ஜயவர்தன 1977ம் ஆண்டு மே 27ம் திகதி இலங்கை, கொழும்புவில் பிறந்தவர்.
இவர் 1997ம் ஆண்டு ஆகஸ்டு 26ம் திகதி அன்று இலங்கை- இந்தியா இடையே கொழும்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார்.
1998ம் ஆண்டு ஜனவரி 24ம் திகதி அன்று ஜிம்பாப்வே – இலங்கை இடையே கொழும்பில் நடைபெற்ற போட்டியிலும், 20 ஓவர் போட்டியிலும், பின்னர் 2004ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் திகதி அன்று பர்கெர் ரெக்ரியேஷன் கிளப்- சிங்களஸ் போர்ட்ஸ் கிளப் இடையே கொழும்பில் நடைபெற்ற போட்டியிலும் விளையாடினார்.
மஹேல இலங்கை அணியில் இளவயது வீரராக அணிக்குள் வரும் போதே எதிர்கால அணித்தலைவர் என்ற எதிர்பார்ப்பு இவர் மீது வைக்கப்பட்டிருந்தது. ஒருநாள் போட்டியிலும் சரி, டெஸ்ட் போட்டிகளிலும் சரி இவர் ஒரு திறமையான துடுப்பாட்டக்காரர் என்பது மட்டுமின்றி, சிறப்பான அணித்தலைவர் என்ற திறமையையும் தன்வசம் வைத்திருந்தார்.
அணித்தலைவராக கண்ட சோதனை தலைவராகக் கடுமையான சவால்களை எதிரணியிடமிருந்து மட்டுமல்லாமல் கிரிக்கெட் சபையின் அரசியலில் இருந்தும் மஹேல எதிர்கொண்டிருந்தார்.
தலைமைத்துவத்துக்கான நீண்ட காலத்தேடலுக்கும், இலங்கை அணியின் புதிய ஒரு தலைவரை இனம் காணவும் மீண்டும் இலங்கைக்குக் கிடைத்த தீர்வு மஹேல மட்டும் தான். இலங்கையில் வைத்து பாகிஸ்தானிடம் தோல்வியடந்ததன் மூலம் எழுந்த விமர்சனங்களுக்கு மஹேல பதிலளிக்க எடுத்துக் கொண்ட களம், இங்கிலாந்து. முதலாவது போட்டியில் இன்னிங்ஸினால் தோல்வியடைய இருந்த இலங்கை அணியைத் தனியொருவராக மற்றும் தலைவராக நின்று காப்பாற்றி வெற்றி தோல்வியற்ற நிலையைப் பெற்றுக் கொடுத்தார் மஹேல.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தொடரில் பெற்ற வெற்றிகளும், இறுதிவரை இலங்கை அணி வந்ததும் மஹேலவின் தலைமையில் மீண்டும் இலங்கை அணி எழுச்சி பெறும் என்ற நம்பிக்கையை அளித்தது.
சில சமயங்களில் மனரீதியாக பாதிக்கபட்டார் மஹேல. காரணம் டைசல் என்ற தனது சகோதரன் 16வது வயதில் மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இறந்து விட்டார். இந்த சம்பவத்தால் மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டார் மஹேல.
சில சமயங்களில் அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கும் இது ஒரு பிரச்சனையாக இருந்தது. பின்னர் எல்லாவற்றையும் மறந்து கிறிஸ்டினா மல்லிகா சிறிசேன என்ற ஒரு பயண ஆலோசகரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் புற்றுநோய் சமந்தப்பட்ட புதிய திட்டத்திற்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார். தனது சகோதரனின் நினைவுகளால் தனது அணி வீரர்களின் ஆதரவுடன் கொழும்புவில் 750 படுக்கை அறை கொண்ட புற்றுநோய் மருத்துவமனை ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளார்.
Related posts:
|
|