சரே அணியுடனான சங்கக்காரவின் ஒப்பந்தம் மேலும் ஒருவருடத்திற்கு நீடிப்பு!

Saturday, September 24th, 2016

இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார மேலும் ஒருவருடத்திற்கு சரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்இதனை சரே கிரிக்கெட் அணியின் முகாமைத்துவம் நேற்று (23) அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் சரே அணிக்காக விளையாடிவரும் சங்கக்கார 2017 ஆம் ஆண்டுக்கும் சரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ஓட்டங்கள் பெற்றுக்கொண்டுள்ளதுடன், இவரின் டெஸ்ட் ஓட்டங்களின் சராசரி 57.40 என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கக்கார சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், உள்ளூர் கழகங்களுக்கான தொடர்களில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Generated by  IJG JPEG Library

Related posts: