சம்பியன்ஸ் தொடரின் இறுதிப் போர் ஆரம்பம்!

Sunday, June 18th, 2017

சம்பியன்ஸ் போட்டிகளின் இறுதிப்போட்டி இன்று இலண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த இறுதி போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கு கொள்கின்றனஇதுவரை இந்த இரு அணிகளும் 128 ஒருநாள் போட்டிகளில் பங்குகொண்டுள்ளன.அவற்றில் 72 போட்டிகளில் பாகிஸ்தானும், 52 போட்டிகளில் இந்தியாவும் வெற்றிப்பெற்றுள்ளதுடன், 4 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

முன்னதாக  நாணயசுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.இதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.

இதனிடையே புதிய ஐ.சி.சியின் ஒருநாள் தரவரிசையில் இந்தியா 2வது இடத்திலும், பாகிஸ்தான் 7வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: