சம்பியன்ஸ் கிண்ண தொடரிலிருந்து விலகினார் குசேல் ஜனித் பெரேரா!

Saturday, June 10th, 2017

இந்திய அணிக்கெதிரான போட்டியில் தசைப்பிடிப்பு காரணமாக போட்டியின் இடைநடுவே வெளியேறிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித் பெரேரா, .சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடரிலிருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக இலங்கை அணியின் சகல துறை வீரர் தனஞ்சய டி சில்வா அணியில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளார். மேலும், தனஞ்சய டி சில்வா இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கை அணியுடன் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த குசேல் ஜனித் பெரேரா, தசைப்பிடிப்பு காரணமாக 47 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: